பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி ஆக பதவி வகித்திருக்கிறார். இந்த 11 வருட கால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் ஷபாஷ் ஷெரிப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஷ் போன்ற இருவரும் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி பாகிஸ்தான் ரூபாய் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் லாகூரில் உள்ள சிறப்பு கோர்ட் இந்த வழக்கை விசாரித்து வருகின்றது. இந்த சூழலில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷபாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக ஷபாஸ் மற்றும் ஹம்சா ஷபாஷ்க்கு சம்மன் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இதற்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வெளியுறவு மந்திரி பிலாவால் பூட்டோ சர்தாரி, உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போன்றோரை தகுதி நீக்கம் செய்ய கோரி முன்னாள் பிரதமர் இம்ரான் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி லாகுர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகின்றது.