Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊழியரை வழிமறித்த மர்மகும்பல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

பேக்கரி கடை ஊழியரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முஷ்டக்குறிச்சியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கமுதியில் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 7 பேர் கொண்ட மர்மகும்பம் செல்வலிங்கத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற கமுதி துணை சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா, இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் செல்வலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் செல்லத்துரை என்பவரை கைது செய்து செய்த நிலையில் மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |