Categories
உலக செய்திகள்

ஊழியர்களின் வேலை நிறுத்தால்…. ரத்தான 1000 விமானங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஜெர்மனி நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் தான் லுப்தான்சா. இந்த விமான நிறுவனம் உள்நாட்டிலும்  ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த விமான நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய விமான நிறுவனமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சுமார் 1,34,000 பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற அல்லது முழுவதுமாக ரத்து செய்ய வேண்டியிருந்தது.

Categories

Tech |