ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கையாண்ட யுக்தி ஊரடங்கு உத்தரவு தான். தற்போது பல மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, ஹாலிவுட்டை பொருத்தவரையில், தளர்வுக்கு பின் பிரபல திரைப்படமான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்,
அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன், தொடங்கப்பட்ட மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஊழியர்கள் சிலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, இரண்டு வாரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.