Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளிக்கு சூப்பர் பரிசு…. விப்ரோ நிறுவன வெளியிட்ட அறிவிப்பு….!!!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சென்ற காலாண்டில் நிகர லாபம் குறைந்தது தொடர்ந்து சென்ற Variable Pay தொகையை குறைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அளித்தது. B மற்றும் C அதற்கு மேல் மிட் மேனேஜர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் Variable Pay வை பெறவில்லை. அதனை தொடர்ந்து நடப்பு காலாண்டில் எதிர்பார்த்ததை விட நிறுவனத்தின் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் 85% ஊழியர்களுக்கு 100% மாறி ஊதியம் அளிப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஹெய்ரி டெலாபோர்ட் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நிறுவனம் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வையும் அளித்துள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனம் மூன்லைட்டிங் வேலையில் ஈடுபடுவதே தொடர்ந்து அதன் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதனையடுத்து ஜூலை-செப்டம்பரில் ரூ. 2,659 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குதாரர்களுக்குக் கூறப்படும் லாபம், முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2,930 கோடியை விட 9.27 சதவீதம் குறைவாக இருப்பதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் ரூ.22,539.7 கோடியாக இருந்தது, முந்தைய ஆண்டில் ரூ.19,667.4 கோடியை விட 14.60 சதவீதம் வளர்ச்சியாகும். வருவாய்க்கு முந்தைய காலாண்டில் ரூ.21,528.6 கோடியிலிருந்து 4.69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.2,563.6 கோடியிலிருந்து 3.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

Categories

Tech |