கொரில்லா என்ற ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சி நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் போது கூட கடுமையான உணர்வுகள் ஏற்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கென்று தனித்தவமான ஒரு கொள்கையை உருவாக்கி இருக்கிறது இந்த நிறுவனம். அதன்படி வேலையை விட்டு நிறுவனத்தில் இருந்து வெளியே செல்லும் ஊழியர்களின் நிலமையை நன்றாக உணரவும், நேர்மையான எண்ணத்துடன் அவர்கள் வெளியேறும் விதமாகவும் ஊழியர்களுக்கு 10% உயர்வுடன் செட்டில்மெண்ட் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இந்த திட்டத்தை வெளியே செல்லும் ஊழியர் ஒருவர் மற்றும் ஒரு புதிய ஊழியர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் காலத்தில் புதிதாக வரும் ஊழியர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தவும் அவர்கள் அடுத்த வேலைக்கு சேரும் வரை அவர்களுடைய நிதிநிலைமையை சமூகமாக கொண்டு செல்வதற்கும் என்று கூறியுள்ளார்.