தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய போனஸ் தொகைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் Biz2Credit என்ற நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 40 மடங்கு போனஸ் வழங்கப்படும் என்றும் பிஎம்டபிள்யூ பைக், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான ரொக்க பரிசு என பல சலுகைகளை ஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி சிறப்பாக செயல்பட்ட ஊழியர்கள் 20 சதவீதம் பேருக்கு 40 மடங்கு போனஸ் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுபோக ஊழியருக்கு விருப்பமான பைக் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள், தங்க நாணயங்கள் என அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், கடந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டதாகவும் ஊழியர்கள்தான் தங்களுடைய நிஜ சொத்துக்கள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே அவர்களை பாராட்டவும், ஊக்குவிக்கவும் இந்த பரிசுத்தொகையை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.