Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் இலவசம்…. ஆனா ஒரு கண்டிஷன்…. இதை மட்டும் செய்து முடித்தால் போதும்…..!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வசதிகளை வேலை செய்யும் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி 7 லட்சம் ரூபாய் வரையிலான பலனும் கிடைக்கும். EPFOசந்தாதாரர்கள் இதனை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் அமைப்பு அதன் சந்தாதாரர்களை முன்கூட்டியே ஆன்லைன் நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியிருந்தது. இதனை செய்யவில்லை என்றால் ஏழு லட்சம் ரூபாய் உங்களுக்கு இழப்பு ஏற்படக் கூடும். இதற்கு நீங்கள் ஒரு படிவத்தை மட்டும் நிரப்பினால் போதும் .

இந்த சலுகையை நீங்கள் எளிதில் பெறலாம். பிஎஃப் மற்றும் ஓய்வூதிய மட்டுமல்லாமல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீட்டின் பலனையும் வழங்கி வருகிறது. அதன் மூலமாக 7 லட்சம் ரூபாய் பெற முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கின்றது. இதற்காக எந்த ஒரு பங்களிப்பும் நீங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. EPF இன் அனைத்து சந்தாதாரர்களின் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்,1976 கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.

EDLI திட்டத்தின் கீழ் ஒவ்வொரு EPFகணக்கிலும் ஏழு லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு கிடைக்கும் என அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு நாமினேஷன் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இந்த மொத்த பலனையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆன்லைன் நாமினேஷன் செய்யாதவர்கள் உடனே செய்வது நல்லது.

Categories

Tech |