நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவை இன்னும் ஈடுகட்ட முடியாத நிலையில், இந்த வருடம் மீண்டும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான “கோல் இந்தியா” அடுத்த 10 ஆண்டுகளில் வருடத்திற்கு 5 சதவீத பணியாளர்களை நீக்கவும், சாத்தியமில்லாத சுரங்கங்களை மூடவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அனாவசிய செலவுகளை குறைப்பதுடன், செயல் திறனையும் மேம்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 80% பங்கு கோல் இந்தியா மூலமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.