இங்கிலாந்தில் சுகாதார துறை ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அந்நாடு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் தற்போது வரை 77,000 சுகாதார துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளரான சாஜித் ஜாவித் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயமாக ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றுள்ளார்.
அவ்வாறு தடுப்பூசி செலுத்தாத சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.