இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், நாளுக்கு நாள் புது வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் விப்ரோ சென்ற காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்போசிஸ் இப்போது அறிவித்துள்ளது.
அதாவது செப்டம்பரோடு முடிந்த காலாண்டில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய Variable Payயில் 60% மட்டுமே இன்ஃபோசிஸ் வழங்க இருகிறது. மொத்த சம்பளத்தில் அதிகபட்சம் 20 சதவீதம் Variable Pay ஆக இருக்கும். அதேநேரம் மூன்லைட்டிங்கிற்கு அனுமதிப்பது, வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட சலுகைகளை இன்ஃபோசிஸ் வழங்க இருக்கிறது.