Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊழியர்கள் பணியிடை நீக்கம்… நகராட்சி அலுவலர்கள் எதிர்ப்பு… ஆணையாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

நகராட்சி ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து ஆணையாளரை கண்டித்து அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமீப காலத்தில் நகராட்சி ஊழியர்கள் 3 பேரை எவ்வித விசாரணையுமின்றி பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி ஆணையாளரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் உடைய நகர தலைவர் முனிராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். மேலும் நகராட்சி ஆணையாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |