தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு work from Home பரிசீலிக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் 50 சதவீதம் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அரசு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். அதனால் வீட்டில் இருந்து பணியாற்றும் உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.