Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் வேலைநிறுத்தம்… 4 நாட்களுக்கு வங்கி சேவைகளில் பாதிப்பு…?

ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகள் நான்கு நாட்களுக்கு செயல்படாததால் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இன்று இரண்டாவது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு தொழில் சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இன்று முதல்  16 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வங்கித்துறை செயல்படுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் பணம், காசோலை, பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விதமான வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |