டைரக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் விஷ்ணு விஷால் பங்கேற்று பேசியிருப்பதாவது “9 திரைப்படங்கள் என்னைவிட்டு சென்றது. எனினும் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இன்று எனது கையில் 9 திரைப்படங்கள் இருக்கிறது. இதற்கிடையில் எஃப்ஐஆர் படத்தின் வசூலை இப்படம் முறியடித்து விட்டது. அதாவது, ரூபாய்.30 கோடியை “கட்டா குஸ்தி” படம் கடக்கப் போகிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.