இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்ததில் இருந்து பல்வேறு வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது RBI ரெப்போ விகிதங்களை 4 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் துவங்கி பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகிறது. பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும் போது இனி நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்ல விதத்தில் வட்டிவிகிதம் வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது எப்டி கணக்குகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை எவ்வளவு வட்டிவிகிதங்களை வழங்குகிறது என தெரிந்துகொள்வோம்.
ஆக்சிஸ் வங்கி
7 – 45 நாட்கள் வரை முதிர்ச்சி அடையும் எஃப்டிகளுக்கு, ஆக்சிஸ் வங்கியானது 3.50% வட்டி விகிதத்தையும், 46 – 60 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 4% வட்டியையும் வழங்குகிறது. 61 நாட்கள் முதல் 6 மாதங்களில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50% வட்டியும், 6 -9 மாதங்களில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளுக்கு 5.25 சதவீத வட்டியும் கிடைக்கும். ஆக்சிஸ் வங்கி 9 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரையிலான எஃப்டிகளுக்கு 5.50 சதவீத வட்டி விகிதத்தையும், 1 ஆண்டு முதல் 15 மாதங்களில் முதிர்ச்சி அடையும் எஃப்டிகளுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. 15 -18 மாதங்கள் வரை முதிர்ச்சி அடையும் எஃப்டிகளுக்கு 6.40 சதவீத மற்றும் 18 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை முதிர்ச்சி அடையும் எஃப்டிகளுக்கு 6.50 சதவீதம், 3 -10 வருடங்களில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளும் 6.50% வட்டி வழங்குகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
இந்த வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளுக்கு 3 முதல் 6.5 சதவீதம் வரையிலும், மூத்தகுடிமக்களுக்கு 3.5% -7% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கி தன் இணையதளத்தில், 5 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுக்கு 5 காலத்திற்கு முன் பதிவு செய்ய விரும்பும் மூத்தகுடிமக்களுக்கு 0.25% கூடுதல் பிரீமியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி
SBI பொதுமக்களுக்கு 3% -6.25% வரையிலும், மூத்தகுடிமக்களுக்கு 3.50% மற்றும் 6.90% வரையிலும் வட்டிவிகிதத்தை வழங்குகிறது. SBI இணையதளத்தின் அடிப்படையில், எஸ்பிஐ ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதமானது 1.00% அதிகமாக இருக்கும். 60 வயது மற்றும் அதற்கு அதிகம் உள்ள அனைத்து மூத்தகுடிமக்களுக்கும் வட்டி விகிதம் 0.50% இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இந்த வங்கி நவம்பர் 16ஆம் தேதியன்று ரூபாய். 2 கோடிக்கு உட்பட்ட எஃப்டிகளுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்தது. அத்துடன் 30 பிபிஎஸ் வரையிலான தவணைக் கால வரம்பில் வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதன் வாயிலாக 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. பொது மக்களுக்கு 3% -6.60% வரையிலும், வயதானவர்களுக்கு 3.5% -7% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.