இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் சி சியை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசி உள்ளார்.
இது பற்றி மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள twitter செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, எகிப்த அதிபர் சிசியை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஒப்படைத்து இருக்கிறேன் என கூறியுள்ளார். எகிப்தின் வெளியுறவுத்துறை மந்திரி சமேசவுக்கரை விடுத்த தனிப்பட்ட அழைப்பை ஏற்று சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரையும் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு பற்றியும் அதிபர் சசியிடம் மத்திய மந்திரி விளக்கி கூறியுள்ளார் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய சுதந்திர எண்ணம் கொண்ட இரு நாடுகளுக்கும் அரசியல் சர்வதேச உறவுகள் மற்றும் சமூக கொள்ளைகளில் சர்வதேச பங்காற்றி வருகிறது. அமைதி வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றிற்கான முகந்திரங்களை இரு நாடுகளும் ஊக்குவித்து வருகிறது என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.