எகிப்தில் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருவதற்கு பழங்கால மன்னனின் சாபம் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எகிப்தை சேர்ந்த பழங்கால மன்னன் பார்வோன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்து வந்த பூசாரிகள் இறந்த மன்னர்களை அடக்கம் செய்யும் பொழுது ‘இவரை யாராவது தொந்தரவு செய்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம்’ என்று சாபம் கொடுப்பார்களாம். அந்த வகையில் தற்போது எகிப்து அரசு அருங்காட்சியதில் உள்ள 22 ராஜ மன்னர்களின் மம்மிகள் வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்காக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் எகிப்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
அதாவது சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் சிக்கியதால் அங்கு கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எகிப்தில் நடைபெற்ற ரயில் விபத்து ஒன்றில் சிலர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பழங்கால 10 மாடி கட்டிடம் ஒன்று அப்பகுதியில் இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருவதால் இதற்கு பழங்கால மன்னர் பார்வோனின் சாபம் தான் காரணம் என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.