எகிப்து தலைநகரான கெய்ரோவின் வட மேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி 41 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து இருக்கின்றனர். இதற்குரிய காரணம் எதுவும் உடனே தெரியவரவில்லை. இதையடுத்து அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கிவிடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் அப்துல்பதா அல்-சிசி தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மொத்தம் 10.3 கோடி மக்கள்தொகை கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வாழும் எகிப்தில் 1 கோடி எண்ணிக்கையில் காப்டிக்இன கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். அண்மையில் அரசியல் சாசன கோர்ட்டின் நீதிபதியாக காப்டிக் இனத்திலுள்ள ஒருவரை சிசி, பணி நியமனம் செய்துள்ளார். சென்ற 2013 ஆம் வருடத்தில் அதிபர் பதவியிலிருந்து முகமது மோர்சி தூக்கி எறியப்பட்டு, அப்துல் சிசி பதவியேற்றது முதல் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் பற்றிஎரிந்து வருகிறது.
இஸ்லாமியர்களால் காப்ட் கிறிஸ்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் முஸ்லிம்களால் தாக்கப்பட்டும், அதிக வேற்றுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்ற புகாரும் காணப்படுகிறது. சமீப வருடங்காக எகிப்தில் பல தீ விபத்துகள் ஏற்படுகிறது. சென்ற 2021ம் வருடம் மார்ச்சில் கெய்ரோ கிழக்கு புறநகரில் துணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் இறந்தனர். 2020 ம் வருடம் கொரோனா நோயாளிகள் 14 பேர் 2 மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.