உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது எகிப்தில் இருக்கக்கூடிய பிரமீடுகள். எகிப்தில் பிரமிடுகள் அனைத்தும் கவர்ச்சிகரமாகவும், மிகவும் பழமையான வரலாற்று மதிப்பு மிக்கதாகவும் உள்ளது. இந்த பிரமிடுகள் அனைத்தும் சிந்தனையுடன் கட்டப்பட்டுள்ளது. இயந்திரங்களின் உதவி இல்லாமல் இந்த கட்டமைப்புகளை இப்போதும் இடிப்பதற்கு பல ஆண்டுகளாகும். எகிப்தில் உள்ள பல பிரமிடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தவித தொழில்நுட்ப உதவியும் இல்லாமல் பிரமிடுகள் இவ்வளவு பிரமாண்டமாக எப்படி கட்டப்பட்டது என்பது தற்போதும் விடை தெரியாத மர்மமாக உள்ளது. பலர் இதனை கட்டியது மனிதர்கள் அல்ல ஏலியன்கள் என்று தெரிவிக்கின்றனர்.
பல ஆய்வுகள் இதனை கட்டியது மனிதர்கள்தான் என்ற தெரிவிக்கின்றன. எகிப்தியர்கள் அனைவரும் மரணத்திற்குப் பிறகு மற்றொரு வாழ்க்கை உள்ளது என்று மிகவும் உறுதியாக நம்பிய காரணத்தினால் தான் தாங்கள் இறந்த பிறகு அந்த உடலை பதப்படுத்தி கல்லறைக்குள் வைத்தனர். எகிப்தில் உள்ள ஒவ்வொரு பிரமிடுகளும் பல மர்மங்கள் மறைந்துள்ளது. இந்த பிரமிடுகள் அனைத்தும் 5000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 30 மாடி கட்டிட அளவிற்கு இருக்கக்கூடிய இந்த பிரமிடுகள் சுமார் 16,000 எடை கொண்ட கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்தில் எப்படி அவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது தற்போது வரை ஒரு விடை தெரியாத மர்மமாக உள்ளது.
ஒரு சிலர் இதனை கட்டியது ஏலியன் தான் என்று கூறினாலும், பலரும் இதனை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று தெளிவான விளக்கத்துடன் தெரிவிக்கின்றனர். நைல் நதியில் கப்பல்களை பயன்படுத்தி கற்களை முதலில் பிரமிடின் அடிப்பகுதிக்கு கொண்டுவருகிறார்கள். பின்னர் விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி அதனை பலூன் போன்ற அமைப்பில் தயார் செய்து பிரமிடின் பக்கவாட்டில் நீரால் இயங்கக்கூடிய லிப்ட் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த லிப்டை பயன்படுத்தி விலங்குகளின் தோலினால் பதப்படுத்தப்பட்ட பலூன் போன்ற அமைப்பில் கற்களை கட்டி அதனை கீழ்ப்பகுதியில் இருந்து அழுத்தம் கொடுக்க கொடுக்க அந்த தண்ணீருடன் சேர்ந்து கற்களும் மேலே செல்கிறது. இப்படித்தான் பிரமிடுகள் கட்டப்பட்டதாக ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.