Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எகிறிய பெட்ரோல், டீசல்…. ”டெல்லி முழுவதும் அதிரடி”…. கெஜ்ரிவால் உத்தரவு …!!

டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசை கட்டமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் முறை முதலமைச்சராக தேர்வாகிய இவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் காரணமாக இரண்டாவது முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் வழங்கிய ஏராளமான நலத்திட்டங்கள் பிற மாநில மக்களையும் பேச வைத்தது.

மக்களுக்கு சேவை செய்வதில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களை பின்னுக்கு தள்ளி பாமரமக்களை எளிதாக கவர்ந்தார். அந்த வகையில் தற்போது அவர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவும் மற்ற மாநில மக்களை மட்டுமல்லாமல் முதல்வர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை  30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |