தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக நகை பிரியர்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச்.5) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 776 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,760க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூபாய் 97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.73.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories