Categories
தேசிய செய்திகள்

எக்கச்சக்கமான சலுகைகள் வேணுமா…? இந்த கார்டு இருந்தா போதும்…. உடனே இதை வாங்குங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகள் முதல் ஷாப்பிங் வரை அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே கிரெடிட் கார்டுகளை வைத்து நடந்து முடிந்துவிடுகிறது. அனைத்து வங்கிகளிலும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் ஐசிஐசிஐ வங்கியும்,  அமேசான் நிறுவனமும் கூட்டாக இணைந்து அமேசான் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டுகள் இதுவரை 20 லட்சம் பேருக்கு வினியோகிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக 20 லட்சம் பயனாளிகள் எட்டிய முதல் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு இதுவேயாகும். கடந்த 9 மாதங்களில் மட்டும் 10 லட்சம் பேர் இந்த கார்டை வாங்கி இருக்கிறார்கள். இந்த கார்டின் சலுகைகள் என்னவென்றால் அளவில்லா ரிவார்டுகள், 60 விநாடிகளில் கார்டு வழங்குதல், அமேசன் பே பேலன்ஸ்க்கு  நேரடியாக ரிவார்டு புள்ளிகள் அனுப்புதல், தொடர்பில்லா பரிவர்த்தனை ஆகியவையாகும்.

இந்த கிரெடிட் கார்டை பெற விரும்புவர்கள் அமேசான் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பித்தவுடன் முதலில் உங்களுக்கு டிஜிட்டல் கார்டு உடனடியாகக் கொடுக்கப்படும். அடுத்த சில நாட்களில்உண்மையான கிரெடிட் கார்டு உங்களுடைய வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமாக பல சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |