தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின் பட்ஜெட் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது. இதில் பேசிய முதல்வர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எக்காரணம் கொண்டும் பின்வாங்கவே மாட்டோம். விவசாயிகள் பயிர் கடன், நகை கடன் தள்ளுபடியில் குறைகள் உள்ளது அதை சரி செய்வோம். அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்போம் என்று சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? என்று குறிப்பிட்டுள்ளார்.