90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகை எனப் பெயர் பெற்றவர் ஆர்த்தி தேவி. இவர் சினிமாவிற்காக தனது பெயரை சுகன்யா என மாற்றிக் கொண்டுள்ளார். புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான இவருக்கு பாரதிராஜா சுகன்யா என பெயர் வைத்துள்ளார். முதன்முதலில் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர் படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து திருமதி பழனிச்சாமி, தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, சின்னஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு ,ஞானப்பழம் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட சுகன்யாவிற்கு படவாய்ப்புகள் குறைந்ததையடுத்து 2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் சுகன்யா நடிப்பது கணவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், எக்குத்தப்பான கேள்விகளையும் கேட்டுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார். திருமண வாழ்க்கை முறிந்த பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது 51 வயதாகும் சுகன்யா இன்னும் தனிமையில் வசித்து வருகிறார். அந்த கசப்பான நிகழ்வுக்குப் பின் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருகிறார்.