பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. அதன்படி
# காரைக்குடியிலிருந்து காலை 5:05 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12606) நாளை (புதன்கிழமை) செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
# எழும்பூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (12635) நாளை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது செங்கல்பட்டிலிருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்படும்.
# விஜயவாடாவில் இருந்து காலை 6:10 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் நோக்கி புறப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் (12711) வரும் 22-ம் தேதி கூடூர்-எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
# எம்.ஜி.ஆர் சென்டிரலில் இருந்து மதியம் 2.10 மணிக்கு விஜயவாடாவை நோக்கி புறப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் (12712) வரும் 22-ம் தேதி எம்.ஜி.ஆர் சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கூடூரில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்படும்.
# ஐதராபாத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12760) வரும் 26-ம் தேதி சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.