பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விஜயவாடா-சென்னை சென்டிரல்(வண்டி எண்:12711) இடையே காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை(செவ்வாய்கிழமை) கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-விஜயவாடா(12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கூடுரில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.
அதனைப்போலவே நெல்லூர்-சூலூர்பேட்டை(06746) இடையே காலை 10.15 மணிக்கும் மறுமார்க்கமாக சூலூர்பேட்டை-நெல்லூர்(06745) இடையே காலை 7.45 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டை-சென்டிரல்(06742) இடையே மதியம் 12.35 மணிக்கும் மறுமார்க்கமாக சென்டிரல்-சூலூர்பேட்டை(06741) இடையே அதிகாலை 5.20 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஆவடி-சென்டிரல்(66000) இடையே அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை(ஆகஸ்ட் 2) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.