Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ” சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி,  வல்சாத்-வேளாங்கண்ணி(09042) இடையே இரவு 7.45 மணிக்கு வருகிற ஆகஸ்ட் 27-ந்தேதியும் மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-வல்சாத்(09041) இடையே மாலை 4.25 மணிக்கு வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதியும் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

திப்ருகர்-பெங்களுரூ(02986) இடையே காலை 7.30 மணிக்கும் மறுமார்க்கமாக பெங்களுரூ-திப்ருகர்(02987) இடையே காலை 10.15 மணிக்கும் புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |