Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காரைக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02606) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-மதுரை (02635) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர்-செங்கல்பட்டு இடையிலும், மதுரை-எழும்பூர் (02636) எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம்-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-காரைக்குடி (02605) சிறப்பு ரெயில் எழும்பூர்-விழுப்புரம் இடையிலும் வருகிற 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகின்ற  21 ஆம் தேதி சென்னை சென்டிரல்-கூடுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரல்- மங்களூரு (06627) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகின்ற 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்டிரல்- ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. விஜயவாடா-சென்டிரல் (02711) எஸ்க்பிரஸ் ரெயில் கூடூர்-சென்னை சென்டிரல் இடையே வருகின்ற 21 ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |