ஆசியாவிலுள்ள போக்குவரத்தில் மிகப் பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே துறை இருக்கிறது. இத்துறையின் கீழ் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவிலுள்ள நடுத்தர மக்களுக்கு இந்த ரயில் சேவையானது ஒரு வரப் பிரசாதமாக காணப்படுகிறது. ஏனெனில் பேருந்துகளை விட ரயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் சேவையை நாடுகின்றனர். அத்துடன் பயணம் செய்யும் நேரமும் குறைவாக உள்ளதால் இச்சேவையானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக சிறப்பு ரயில்களை தவிர்த்து எந்த ஒரு ரயில்களும் இயங்காமல் இருந்தது.
கொரோனா காலக்கட்டத்தில் ரயில்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் மேற்கொள்வதால்,நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்திய ரயில்வே வாரியம் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்திருந்தது. இப்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி விட்டதால் இந்திய ரயில்வே வாரியம் அனைத்து ரயில் சேவைகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை தவிர ரயில்வே நிர்வாகத்தில் ரயில்சேவை பராமரிப்பு பணிக்காக பணிகள் நடைபெறும் பகுதிகள் வழியே போகும் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்துசெய்வது வழக்கம் ஆகும்.
அந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் நாளை(ஆகஸ்ட்.2) மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
# விஜயவாடா -சென்னை சென்டிரல் (வண்டி எண்:12711) இடையில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை கூடூர் -சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
# சென்னை சென்டிரல் -விஜயவாடா (12712) இடையில் மதியம் 2:10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை சென்டிரல் -கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கூடூரிலிருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.
# நெல்லூர் -சூலூர்பேட்டை (06746) இடையில் காலை 10:15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை – நெல்லூர் (06745) இடையே காலை 7:45 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
# சூலூர்பேட்டை -சென்டிரல் (06742) இடையில் மதியம் 12.35 மணிக்கும், மறுமார்க்கமாக சென்டிரல் – சூலூர்பேட்டை (06745) இடையே அதிகாலை 5:20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
# ஆவடி -சென்டிரல் (66000) இடையில் அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.