திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் மத்திய அரசின் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் ஏற்படுவதாகவும் குடிநீர் இணைப்புகளுக்கு பணம் கேட்பதாக புகார்கள் அளித்து படலையார்குளம் மற்றும் பத்மநேரி பகுதி மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் யூனியன் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படை உள்பட பலரும் கலந்து கொண்டனர். பின்னர் களக்காடு யூனியன் ஆணையரிடம் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.