இன்றைக்கு தமிழக சட்டமன்றம் கூடியவுடன் எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் ஒரு பிரச்சனையை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு கொலை வழக்கை தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று பேசினார்.
இதற்கு சபாநாயகர் உடனடியாக பேச அனுமதி மறுத்தநிலையில் உடனடியாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதில் சொன்னார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது” – நீங்களே அந்த பிரச்சனையை கிளப்புறீங்க என்று சொல்லியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் இன்றைக்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவருமே கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்குள் வந்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்கவில்லை என்று கூறி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.