நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்..
நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றது.. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், காலஅவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை.. எனவே இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி என்வி ரமணா, எங்களது தீர்ப்புகளுக்கும், உத்தரவுக்கும் மத்திய அரசு மதிப்பு வழங்குவதில்லை.. நாடு முழுவதிலுமுள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்..
மேலும் எங்களது பொறுமையை மிகவும் சோதிக்க வேண்டாம் எனவும், அவர் மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.. பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் தீர்ப்பாயங்கள் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசு இன்னும் நிரப்பாமல் இருப்பது ஏன் என்று கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்..
தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது. நீங்கள் இப்படி ஒரு செயல்படாத ஒரு தீர்ப்பாயங்கள் வைத்திருப்பதற்கு பதிலாக தீர்ப்பாயங்கள் அனைத்தையும் மூடி விடலாம் என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.. செப்டம்பர் 13-ஆம் தேதி வரை கடைசியாக உங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறோம் அப்படி இல்லை என்றால் நாங்களே அந்த பணியை செய்ய வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்..