Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” உண்ணாவிரத போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மண்டல பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.அன்பு மணவாளன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், சாமி அய்யா, கார்த்திகேயன், மணிமாறன் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |