Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களால ஒன்னும் பண்ண முடியல… சீக்கிரம் செஞ்சி முடிங்க… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இதனையடுத்து கடந்த மூன்றாம் தேதி அந்த மின்மாற்றி மீது லாரி ஒன்று மோதியதால் அது முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதிலிருந்து மின் விநியோகம் இல்லாததால் வயல்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் வயல்களில் உள்ள பயிர்கள் முற்றிலும் காய்ந்த நிலையில் உள்ளது.

எனவே அந்த மின்மாற்றி சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் சீரமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இதனால் வயல்களில் உள்ள பயிர்கள் காய்த்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் மிகவும் வருத்தத்துடன் உள்ளார்கள். இந்நிலையில் இந்த மின்மாற்றி சீரமைக்கும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  என்றும் விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த மின்மாற்றி சீரமைக்கும் பணி தாமதமானால் விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |