Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களிடமிருந்து பறித்து…. “வேறுநாட்டில் ஆசியக்கோப்பையை நடத்தினால்”…. நாங்கள் பங்கேற்கமாட்டோம்…. ரமீஷ் ராஜா எச்சரிக்கை..!!

அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கான போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், பாபர் அசாம் தலைமையிலான அணி, போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறக்கூடும் என்று ரமீஷ் ராஜா எச்சரித்தார்.

2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 50 ஓவர் ஆசியக்கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டியை வேறு ஒரு நடுநிலையான இடத்திற்கு நடத்த வேண்டும் என்றும், அப்படி நடத்தினால் இந்தியா பங்கேற்கும் என்று தெரிவித்தார். ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் (பிசிபி) தலைவர் ரமிஸ் ராஜா, அடுத்த ஆண்டு இந்தியாவில் திட்டமிடப்பட்ட 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்?”. எங்களுக்கு தெளிவான நிலைப்பாடு உள்ளது.. டீம் இந்தியா இங்கு [ஆசியா கோப்பைக்கு] வந்தால், நாங்கள் 50 ஓவர் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு செல்வோம். அவர்கள் வரவில்லை என்றால் அவர்கள் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை விளையாடலாம்.” நாங்கள் பங்கேற்கமாட்டோம் என்று தெரிவித்தார். இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே வார்த்தை மோதல் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு பதிலாக வேறொரு நாட்டிற்கு மாற்றம் செய்வதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ரமீஷ் ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானியிடமிருந்து பறித்தால் நாங்கள் முழுவதுமாக போட்டியிலிருந்து வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார். அதாவது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவின் எதிர்ப்பினால் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வேறொரு இடத்திற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இடமாற்றம் செய்தால் பாகிஸ்தான் பங்கேற்காது என தெரிவித்திருக்கின்றார்.

கடைசியாக 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்றது. மறுபுறம், பாகிஸ்தான், 2016 இல் டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் சென்றது. இரு அணிகளும் 2012 முதல் இருதரப்பு தொடர்கள் எதிலும் பங்கேற்கவில்லை.. ஆனால் அவர்கள் ஐசிசி நிகழ்வுகள் மற்றும் ஆசிய கோப்பையில் ஒருவரையொருவர் சந்தித்து வருகின்றனர்.. கடைசியாக இரு அணிகளும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்னில் டி20 உலகக் கோப்பையில் மோதியது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |