Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களிடம் அதிகமாக கட்டணம் வசூல் செய்யுறாங்க …. மாணவிகள் அளித்த புகார்…. அதிரடி உத்தரவிட்ட கல்லூரி இயக்குனரகம்….!!!!

அதிக கட்டணம் வசூலித்த   கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நரசிங் கல்லூரி   ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்  முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர்   மாணவிகளிடம் செய்முறை தேர்வுக்கு முறைகேடாக கட்டணம் வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் வசந்தி மாணவிகளிடம் முறைகேடாக பணம் வசூலிப்பது தெரியவந்தது. இதனையடுத்து வசந்தியை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில் பணியிடை  நீக்கம் செய்யப்பட்ட வசந்தி  நேற்று ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |