நெல்லையில் தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறையை தீர்க்கும் விதமாக கூட்டம் நடைபெறவிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தலைமை தபால் அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் வைத்து வருகிற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது.இக்கூட்டத்தில் நெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களான பாளையங்கோட்டை மற்றும் அம்பை பகுதி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தபால்துறை சேவையை குறித்த குறைபாடுகளையும், தபால் மேம்பாட்டு ஆலோசனைகளையும் சுய விவரங்களுடன் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்திற்கு நேரில் செல்ல இயலாதவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் வருகின்ற 24-ம் தேதிக்குள் கிடைக்கும்படி தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று நெல்லை தபால் முதுநிலை கண்காணிப்பாளர் துரைசாமி அறிக்கை விடுத்துள்ளார்.