சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் சாதி வாரியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோர் மகாசபை சேர்ந்த குழுவினர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதியை வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது அந்த குழுவினர் தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய உமாபாரதி, “அதிகாரிகள் என்பவர்கள் ஒன்றுமே இல்லை. அவர்கள் எங்களுடைய செருப்பை தூக்கவே இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் அப்படி செய்வதை நாங்கள் அனுமதிக்கிறோம். அவர்களுக்கு என்று எந்தவொரு தனிப்பட்ட ஆற்றலும் கிடையாது என்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளி வந்ததையடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமா பாரதி இந்த பேச்சுக்கு அரசு அதிகாரிகள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ब्यूरोक्रेसी कुछ नहीं होती,चप्पल उठाने वाली होती है..चप्पल उठाती है हमारी @umasribharti का बयान @ndtv @ndtvindia @manishndtv@GargiRawat @sanket @alok_pandey@vinodkapri pic.twitter.com/IRBQNA9vVe
— Anurag Dwary (@Anurag_Dwary) September 20, 2021