தங்களின் திருமணத்தை ஒளிபரப்பி அதிக வருமானம் பெற்றுவிட்டதாக ரவீந்தர் பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளார்.
சென்ற சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்திரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனலுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணத்திற்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற ரவீந்திர்-மகாலட்சுமி நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது ரவிந்தர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. திருமணம் இவ்வளவு பிரபல்யமாக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுறையில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது ஒரு வித்தியாசமான செயல். செல்லும் இடங்களில் எல்லாம் எங்களை வாழ்த்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி என பேசி உள்ளார்.