இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து பெப்சி அமைப்பு தொழிலாளர் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த ஆர்.கே.செல்வமணி , ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும்போது ஆங்கில படங்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் , வானத்திலிருந்து 60அடி 100 அடி உயரத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த தொழில் நுட்பக்கலைஞர்கள் முன்வருகிறார்கள். அதற்கு சரியான உபகரணங்கள் சினிமாத்துறையில் இல்லை. இதனால் வெளியிலிருந்து உபகரணங்களை கொண்டு வருகிறார்கள். அதை கையாளும் திறன் சினிமா தொழில்நுட்பத்தில் உள்ளவர்களுக்கு இல்லை என்று வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பெப்சி அமைப்பில் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.