Categories
மாநில செய்திகள்

“எங்களுக்கும் பசிக்கும்ல”…. பிரியாணி வாங்க அடித்து பிடித்து ஓடிய அதிமுக ஆதரவாளர்கள்…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரியாணி வாங்குவதற்காக ஒருவரை ஒருவர் தள்ளியபடி முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அதாவது வட சென்னை பகுதியில் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் 37 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதையடுத்து அதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அனைவரும் உணவு சாப்பிடுமாறு அறிவிப்பு வெளியானதும், பலரும் முண்டியடித்துக் கொண்டு பிரியாணியை வாங்குவதற்கு அலைமோதினர்.

Categories

Tech |