Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கும் வீடு வேண்டும்… ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு… திருநங்கைகளின் கோரிக்கை…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் திருநங்கைகளான எங்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை எனவும் அப்படியே வீடு கொடுத்தாலும் பல மடங்கு வாடகை வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எங்களுடைய வருமானம் மிகவும் குறைவாக இருப்பதால் மிகவும் அவதியடைந்து வருகிறோம்.

எனவே எங்களுக்கு சமூக நலத்துறை மூலம் சுயதொழில் பயிற்சி அளித்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும், ராமநாதபுரத்தில் திருநங்கைகளுக்காக அரசின் சார்பில் இலவச வீடுகள் கட்டி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் இதே நிலைமை தொடர்ந்தால் நாங்கள் வசிப்பதற்கே இடம் இல்லாத சூழல் ஏற்படும் என கூறியுள்ளனர். மேலும் திருநங்கைகள் என்று எங்களை அறிவித்ததால் அரசின் சலுகைகளும் கிடைப்பது இல்லை. ஆகவே எங்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |