மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது 7 திருநங்கைகள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உங்கள் கோரிக்கை குறித்து நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளியுங்கள் என்று கூறினர். இதனையடுத்து திருநங்கைகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.