அஜித்தின் வலிமை திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல நாட்களாக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் வலிமை திரைப்படத்திற்காக காத்திருந்தனர். தற்போது இன்று உலகம் முழுவதும் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த எதிர்பார்ப்பை வலிமை படத்தின் டீசரும், ப்ரோமோ மேலும் அதிகரித்தது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறைய தொடங்கியதை தொடர்ந்து திரையரங்கிற்கு முழு அனுமதி கிடைத்த நிலையில் நேற்று படம் வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருவது என்பது பலராலும் நம்ப முடியாத விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் அடித்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதையும் தாண்டி தற்போது விஜய் ரசிகர்கள் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு வரவேற்பு வரவேற்று பேனர் வைத்து இருப்பது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் எங்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் ஒரு போதும் பொறாமை இருந்தது இல்லை என விஜய் ரசிகர்கள் உணர்த்தி உள்ளனர் என்பது பலரது கருத்தாக உள்ளது.