Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்…. நுகர்பொருள் வாணிப கழக சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோவிலூர் நுகர்பொருள் வாணிப கழக நெல் குடோன் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க  நிர்வாகி புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் லாரி  செல்வதற்கு வசதியாக உடனடியாக  சாலை அமைத்து  தரவேண்டும்.

மேலும் மின் விளக்கு வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும்,சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடுசரியான முறையில்  பராமரிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி  போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |