ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் 29 ஊராட்சிகள் அமைந்துள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தலைவர்கள் கூட்டமைப்பு நடத்த இருந்தனர்.
இந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடம் திறக்கப்படாமல் இருந்ததால் ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்களுக்கு கூட்டம் நடத்த தனியறை ஒதுக்கி தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இவர்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.