அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியின் 4-வது வார்டில் வில்வ நகர், வில்வ நகர் காலனி, புதுத்தெரு, புது காலனி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது. மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் புதைவட கேபிள் பதிக்கும் பணிகள் முடிவடைந்தது. ஆனால் நகரின் மைய பகுதியான இந்த பகுதிகளில் புதைவட பணிகள் நடைபெறவில்லை. மேலும் இங்கு 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அப்படி வந்தாலும் தண்ணீர் பழுப்பு நிறத்தில் தான் வருகிறது. எனவே இந்த பகுதி மக்களுக்கு நீர்த்தேக்க தட்டி அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மேலும் சேதமடைந்த நிலையில் இருக்கும் சமுதாய நலக்கூடம், ரேஷன் கடை, நூலகம் , உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. அதற்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் மூலம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும் மக்களுக்கு கல்வி கடன், தாட்கோ கடன் உள்ளிட்ட கடன்கள் வங்கிகளில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.