பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தங்களுக்கு இரண்டாவததாக பிறக்கவுள்ள குழந்தை பற்றி கூறியுள்ளார்கள்.
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததிலிருந்து பல பிரச்சனைகள் கிளம்பியது. இந்நிலையில் சமீபத்தில் இத்தம்பதி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை அளித்தது, மேலும் அரச குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்தியது.
அதாவது வழக்கமாக அரச குடும்பத்தின் ரகசியங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் அதற்குரிய முறைப்படி தான் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஆனால் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகியதால், அந்த பேட்டியில் தன் இரண்டாவது கர்ப்பம் பற்றியும் தங்களுக்கு பிறக்கவுள்ள குழந்தையின் பாலினம் குறித்தும், மேகன் பல ரகசியங்களை கூறியுள்ளார்.
அதாவது இவர்களுக்கு முதலில் ஆண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில் அடுத்ததாக பெண் குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் இரண்டு குழந்தைகளோடு உள்ள குடும்பம் மிகவும் அழகானது. அதிலும் ஆண் குழந்தைக்கு பின்பு ஒரு பெண் குழந்தை கிடைத்தால் வேறு என்ன வரம் வேண்டும் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்கள். இதனால் எங்களுக்கு 2 குழந்தைகள் போதுமானது என்றும் தெரிவித்துள்ளனர்.