Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே புரோட்டா வேண்டும்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சகோதரர்களை கத்தியால் குத்திய 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் பகுதியில் இதயத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து பி.என். சாலையில் தள்ளுவண்டி உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 6 பேர் வந்து சாப்பிடுவதற்கு பரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் சுல்தான் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுல்தான் மற்றும் இதயத்துல்லா ஆகிய 2 பேரையும்  கத்தியால் சரமாரியாக குத்தி  விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த 2  பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இம்ரான், அஸ்கர் அலி என்ற 2  பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 4 பேரை   தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |